முத்தம்
அன்னநடை நடந்து வந்து .......
குறுஞ்சிரிப்பு சிரித்து நீயும் ......
என்னை இருக்க தழுவி ......
என் -கண்ணத்தில் நீ ......
பதித்த முதல் முத்தத்தை ......
என் -இறப்பிலும், நிணைத்து ......
புல்லரித்து மரிதேனடா......
என் அன்பு செல்லமே
தென்றல்
சாலையின் இரு புறமும் .....
புல் வெளிகள் அழகாய் .......
பட்சை கம்பளம் விரிக்க ......
மரங்கள் தலை சாய்த்து வரவேற்க .....
குயிலினங்கள் பாட்டிசைக்க .....
நவரசங்களை காட்டி ஆடி வருவாயோ ......
தென்றலே நீ எபோதும்
கண்நீரே
நீ -எங்கிருந்து தோன்றுகிறாய் ........
மனம் சொல்லும் சொல்லாலா ......
மூளை இடும் கட்டளையாலா ......
விழிகளின் கண் அசைபினாலா .....
ஓரு சொட்டாக வந்தாலும் ....
துளி துளியாய் வந்தாலும் .....
அருவியாக வந்தாலும் ....
நினைத்தவுடன் வருவது எப்படியோ .....
திறமையாலும் உருவங்களாலும் ....
பணத்தாலும் செயலாலும் ....
சாதிக்க முடியாததை ....
இமைக்குள் இருந்து கிளம்பும் -நீ ....
நினைத்ததை சாதிப்பது எப்படியோ
தாலாட்டு
கவிதை எழுத நினைகிறேன் ....
காகிதம் தான் கிடைக்கலை.......
சோகம் சொல்ல நினைகிறேன் ........
தோள்சாய யாருமில்லை ......
ரயிலின் காலி சீட்டதுவை -நான் ......
தாயின் மடியாக நினைத்து தலை சாய்க்க ....
கட கட என தாலாட்டு பாடியதே .....
நான் சிந்திய கண்ணீரை .......
காற்றாய் மறைத்து தாலாட்டியதே......
என்னை மறந்து நான் தூங்க .......
என் சோகம் மறைந்ததுவே.......
கண்முழித்து பார்கையில்லே .......
என் எல்லை வந்ததுவே ......
என் சுமையை இறக்கி வைத்து .....
தாயை பிரிந்து நான் இறங்க ........
என் பாரம் குறைந்ததுவே ........
என் வழியே நான் செல்ல .....
ரயில்லதுவும் மறைந்ததுவே........
என் போல் எத்தனை சோகங்களோ ......
அவள் -மடியில் தலை சாய்த்து கொட்டியதோ ....
இனி கொட்டத்தான் போகிறதோ ....
கட கட என தாலாட்டு பாடியே .....
ஊர் ஊறாய் சுற்றுகிறாள் ....
ஆறுதல் சொல்லிடவே .......
.ரயில்; அன்னை அவள்தானே
ஞாயிறு, 13 செப்டம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக