காத்திருப்பேன் உம் அழைபேசி அழைபிர்காக
அயல்நாட்டில் அயர்ந்து உறங்கும் -அன்பரே
இங்கு -பொழுது புலர்ந்து
விடிவெள்ளியும் முளைத்துவிட்டது
முகம் பார்க்க முடியாத பிரிவோ -நமக்கு
என்று -பிறக்குமோ நம் வாழ்வில் விடிவெள்ளி
நீர் -ஓரு நாட்டிலும்
நான் இங்கும் அல்லல்படும்
அவலமும் என்று தீருமோ ?
உறக்கம் என்பது நம்மை -மீறி
நம்மை தீண்டும் போது
நீர் என்னுடன் கனவிலும்
நான் உம்முடன் கனவிலும்
குடும்பம் நடத்தும் குறைதீரும்
நாள் என்று வருமோ ?
குடும்பத்திற்காக பொருள் தேட -நீர்
அயல்நாடு சென்றாலும்
குடும்பமாக இல்லாது -இங்கு
நான் தவிக்கும் தவிப்பை அறிவீரோ ?
இந்த ஓரு நல்ல நாளும் -நீர்
இன்றி எனக்கு சிறப்பில்லை
எபோது இங்கு வருவீரோ
என்னுடன் சேர்ந்து இல்லறம் நடதுவீரோ /?
மனம் முடிந்த ஆறு மாதத்தில்
ஓரு வருடத்தில் வருகிறேன் -என்று
என்னை பிரிந்து சென்ட்ரீறே
வருடம் இரண்டு ஓடிவிட்டதே
என் -முகம் உம் மனதில்
நிழலாக மாறும் முன்
இங்கு வந்து விடுங்கள் அன்பரே
அந்த ஆறு மாதத்தில் -நான்
உம்முடன் பகிர்ந்து கொண்ட
சந்தோசங்களையும் இன்பங்களையுமே
இப்போதும் வாழ்க்கையாக எண்ணி
வாழ்ந்து வருகிறேன் கணவுகளுடன்
போதுமென்ற மனமே பொன் செய்யும்
பொருத்தது போதுமென்று
என் -மனம் இடித்துறைகிறது
உடனே வந்து விடுங்கள் அன்பரே
பொருள் தேடும் நோக்கை
நம் -நாட்டிலே செய்து கொள்வீராம்
இன்று நம் திருமண நாள்
இனிதே கொண்டாட வேண்டிய நாள்
நலம் விசாரிக்க முடியாது
நீர் உறங்கும் நேரமிது
நீர் விழித்ததும் என் போல்
இன் நாளை உணர்வீரோ தாமாக ?
என்னுடன் அலைபேசியில்
பேசி பேசி மகிழ்வீரோ ?
தெரியவில்லை எனக்கு
எனை மறந்து நான் உறங்கும்வரை
காத்திருப்பேன் கண்ணயராமல்
உம் அலைபேசியின் அழைபிர்க்காக
செவ்வாய், 2 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக