தீக்குச்சி
தீக்குச்சியை உரசினால் -அதன்
முனை பற்றி எரியும் -நொடியில்
உன் -பார்வை உரசும் ஓவ்வொரு
நொடியும் என் தேகம் எரியுதடி
உன் -அன்பின் கனலை தாங்காது பெண்னே!
*****************************************************************************
நிணைவுகள்
நீரில் எழுதிய -உன்
நிழல் ஓவியமும்
என் -நினைவில் எழுதிய
உன் -உயிர் ஓவியமும்
நீ எனை மறுத்ததால்
என் -கண்ணீரில் கரைந்து
மார்டன் ஓவியமாகி
மாறாக முடியாத நிணைவு சின்னமாய்
என் -மனதில் என்றும்
**************************************************************
தீ
தீபமாகவும் கற்பூரமகவும் யாகமகவும்
சுடராக எரிந்தால் கடவுளாக நேசித்து -நீ
எல்லோராலும் வணங்கபடுகிறாய்
காட்டுதீயாக கொழுந்துவிட்டு
எரிந்தால் எரித்ததால் -நீ
எல்லோராலும் வெருகபடுகிறாய்
**********************************************************
புன்னகை (குழந்தையின்)
உருவாக்கி பூத்த
பூவிற்கு விலை உண்டு
கருவாகி பிறந்த -உன்
புன்னகைககு விலை உண்டோ ?
**********************************************************
புதன், 16 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக