காதல் (தத்துவங்கள்)
காதல் (தத்துவங்கள்)
1) மெய் வருத்தி உருகினாலும்
பொய் வருத்தி உருகினாலும்
உண்மை அன்புக்கு மட்டுமே
கட்டுண்டு காத்து கிடப்பது
உண்மை காதல் ..................
2) வெற்றி பெற்றவனுக்கு
காதல் ஓரு மைல் கல்
தோல்வி உற்றவனுக்கு காதல்
ஓரு நிணைவு சரித்திரம் !!!!!!!!!!!!!!!
3) மனம் காற்றாடியாய் அலைந்தாலும்
பறவையாய் இறக்கை கட்டி பறந்தாலும்
கல்லறையே முடிவு என்றாலும்
கால் கடுக்க காத்து கிடப்பது
உண்மை காதல் ..................
4) கல்லடி பட்டு சிதறினாலும்
கண்ணாடியின் எல்லா துண்டுகளிலும்
பிம்பங்கள் பிரதிபலிப்பது போல்
இறப்பின் எல்லை வரை
எந்நிலையிலும் மின்னி மறைவது
உண்மை காதல் ..................
5) கண்ணா மூச்சியாய் காலங்கள் கடந்தாலும்
கடல் ஆழம் போல்
எல்லை காண முடியாது
நினைவலைகளாய் மனதில்
அலைபாய்ந்து ஒளிந்து கொள்வது
உண்மை காதல் ..................
*********************************************************************************************************************************************
அன்பே என் அன்பே
1)வெத்து தாளை கொடுதேன் -எனை
வெறுப்பாய் பார்காதே -நீயும்
தாளினில் பேனாவில் -உன்
பெயரை எழுதும் போது
முனை குத்தி உனக்கு
வலிக்கும் என்பதாலே
என் -இதயத்தில் எழுதி கொண்டு
உனக்கு வெற்று தாளை தந்தேன்
அன்பே என் அன்பே !!!!!!!!!!!!!!
********************************************
2) அன்பு என்ற மூன்று எழுத்தை
காதல் என்ற மூன்று எழுத்தாய்
கடிதம் என்ற நான்கு எழுத்தில்
கட்டிபோட்டு உன்னிடம் கொடுக்க
விருப்பமில்லை எப்போதும் எனக்கு
அன்பே என் அன்பே !!!!!!!!!
*******************************************
3) உன் -பார்வையின் அர்த்தத்தை
மனதில் படம் பிடித்து
இதயத்தில் பூட்டி வைத்து
தொலைக்காமல் காத்திருக்கிறேன்
நீயும் -எனை சிறைபிடித்த பின்
என்னிடம் உன் காதலை சொல்ல
உன் -வாசத்தை காற்றில் சுவாசித்த படி
தினம் நீ எனை கடந்து போகையில்
அன்பே என் அன்பே!!!!!!!!!
*************************************
4) நீ புத்தகமாக இருந்தால்
படித்து இருப்பேன்
ஓவியமாக இருந்தால்
ரசித்து இருப்பேன்
சிற்பமாக இருந்தால்
சிந்தை மயங்கி நின்று இருப்பேன்
அலையாக இருந்தால்
ஓடி பிடித்து விளையாடி இருப்பேன்
காற்றாக இருந்தால்
உன்னுடன் கலந்து
தென்றலாகி இருப்பேன்
மேகமாக இருந்தால்
சந்திரனாய் பிரகாசித்து இருப்பேன்
நீ -உயிராகி போனதாலே
என் -உயிர் துறந்து உன்னுடன்
கலக்க முடியாதே - நீ
என் காதலை உணர
அன்பே என் அன்பே!!!!!!
***********************************************************************************************************************************
செவ்வாய், 27 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
super
பதிலளிநீக்கு