ஆதி
ஈரைந்து மாதம்
தன் கருவறையில்
தன் உயிரினில் - ஓர்
உயிராய் சுமந்த தாய்
ஓரு நாளும் உன்னை
மனதார எப்போதும் .
வெருதிட மாட்டாள்
சீராட்டி பாராட்டி பார்த்து
பார்த்து வளர்த்த- நீ
கட்டிளம் காளை வயதில்
விபத்தால் கால் முறிந்து
நடக்க முடியாது போனாலும்
உண்னை -தன் விழியில் வைத்து
இமையாய் காக்கின்றாளே
சிறு குழந்தை போல் இப்போதும்
ஊராரும் குடும்பத்தாரும்
சண்டையிட்டு கேலி செய்தாலும்
உனக்காகவே வாதாடுகிரளே
உண் - தந்தையும் இன்றி
தனி ஓரு பெண்ணாய்
உண்னை போற்றி காகின்ராளே
அவளுக்காக நீ பொருத்து கொள்
தன்னால் சண்டை என்று
சாக நீயும் துணிவது
கோழையின் செயலப்பா
நாமும் வாழ முடியும் என்று
தாய்க்கு இருக்கும் நம்பிக்கையை
நீ - கெடுத்து விடாதாதே
நீயின்றி வாழ -உலகில் அவளுக்கு
இனி -வேறு என்ன இருக்கிறது ?
மரணம்தான் நிம்மதி என்றால்
தவிக்க விடாது -அவளையும்
உன்னுடன் அழைத்து செல் -நீயே
உற்றாரும் உறவினரும்
ஊராரும் ஒரே அடியாக
பேசி தீர்த்திடுவார்கள்
ஆதியின் குடும்பம் முடிந்த தென்று
வெள்ளி, 26 பிப்ரவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக